Kalki 05.09.2010
Designed & Hosted by
 

கலைவாணி, வேளச்சேரி

நான் ஃபிளாட்டில் வசித்து வருகிறேன். கடந்த ஒரு மாதமாக எங்கள் வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் மாறி மாறி ஜுரத்தின் பிடியில் இருக்கிறார்கள். ஏன் இப்படித் திடீரென பலருக்கு ஒரே சமயத்தில் ஜுரம் வருகிறது?

பொதுநல மருத்துவர் முரளி ஆச்சாரியா:

நீங்க சோல்வது ரொம்ப சரி. க்ளினிக்குக்கு வரும் நோயாளிகளில் பாதிக்குப் பாதி பேர், ஜுரத்தோடதான் வர்றாங்க. இதற்குக் காரணம் பருவநிலை மாற்றம்தான். காலையில் சுட்டெரிக்கும் வெயில், திடீரென்று மாலையில் பெயும் இலேசான மழை. மழை பெöது கொண்டே இருக்கும்போதே வெயில்... இப்படி மாறி மாறி வருவதால், சளி, இருமல், தொண்டைக் கட்டுவது, தலை வலி, உடல் வலி, ஜுரம் எனப் பரவலாகப் பலருக்கும் பாதிப்பு வருகிறது. குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் நோö எதிர்ப்புத் தன்மை பலவீனமாக இருக்கும். இதனால் வைரஸ் ஜுரம் அவர்களை வெகு சுலபத்தில் தொற்றுகிறது. தேர்ந்தமருத்துவரிடம் சென்று ஜுரத்துக்கான சரியான மாத் திரை மருந்துகளை உட்கொண்டால் இந்த ஜுரம் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகிவிடும்."


குணசேகரன், திருவையாறு

என் அம்மாவுக்கு 62 வயதாகிறது. அவர் திடீர் திடீர் என சம்பந்தமில்லாமல் பேசுகிறார். ஞாபகமும் மறந்து போகிறது. அவருக்கு வந்திருப்பது என்ன?

மூளை, நரம்பியல் நிபுணர் நாகராஜன்: உங்கள் அம்மாவுக்கு வந்திருப்பது dementia (ஞாபகமறதி) என்று ¦º¡ல்லக்கூடிய ஒருவித alzheimers disease ஆக இருக்கலாம். மூளையின் ஒருசில குறிப்பிட்ட பகுதிகள் சுருங்குவதால், அறிவாற்றல் மற்றும் நினைவுத்திறன் ஆகியவை இவர்களுக்குக் குறைய ஆரம்பிக்கும். மூளையின் முன் பகுதியில் சில வகையான நச்சுத்தன்மை கொண்ட புரோட்டீன்கள் சுரக்க ஆரம்பிப்பதால், இந்த ஞாபகமறதி நோ வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அன்றாட நிகழ்வுகள் எதுவும் ஞாபகம் இருக்காது. பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்கு, கடைக்குப் போனால் வீட்டுக்குத் திரும்ப வழி தெரியாமல் திணறுவார்கள். இவர்களது பெயர், வீட்டு விலாசம், குடும்பத்தினர்களின் பெயர்கள் என எதுவுமே இவர்களுக்கு ஞாபகத்தில் இருக்காது. ஆனால், பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவை எல்லாம் ரொம்ப சரியாகச் சோல் வார்கள். அதே போல இவர்கள் பேசும் வார்த்தைகளும் கோர்வையாக இருக்காது. இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்த உடனேயே ஒரு நல்ல மூளை நிபுணரிடம் பாதிக்கப்பட்டவரை அழைத்துச் செல்வது அவசியம். உங்கள் தாயையும் கட்டாயம் ஒரு மூளை நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள்."

ரேகா சுப்ரமணியம், அம்பத்தூர்

ஆறு வயது நிரம்பிய என் மகள் ஸ்ருதிக்கு எதற்கெடுத்தாலும் எரிச்சல், கோபம் என வருகிறது. இந்த வயதிலேயே எரிச்சல், டென்ஷன் என்றிருப்பது சரியா?

குழந்தைகள் மனநல மருத்துவர், வெங்கட்ரமணி :

ஆறு மாதக் குழந்தைக்கும் கோபம், எரிச்சல், மனச்சோர்வு என எல்லாமே ஏற்படும். அம்மா, அப்பா என இருவரும் வேலைக்குச் சென்று விடுகிறார்கள் என்ற ஏக்கம், இதை எடுக்காதே, அதை எடுக்காதே என்று தொடர்ந்து வரும் கட்டளைகள். அதனால் ஏற்படும் எரிச்சல்கள் எனச் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கே ஏற்படும்போது ஆறு வயது செல்லக் குட்டீஸ்களுக்கு இவை வருவது இயற்கையே. பெற்றோரான நீங்கள் அவளுடன் தினமும் குறிப்பிட்ட சில மணி நேரங்களாவது செலவிடுங்கள், கட்டாயம் ஓடி, ஆடி, விளையாடுவதற்கு இடத்தையும், நேரத்தையும் சேர்த்தே ஒதுக்குங்கள். பள்ளியில் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டு வரும் குழந்தைக்குச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழி அமைத்துக் கொடுங்கள். எல்லா வற்றுக்கும் மேலாகப் பொறுமையாக இருங்கள். உங்கள் மகளின் கோபம், உங்களின் பொறுமைக்கு முன்னால், பொசுக்கென பொசுங்கிவிடும்." 

 தீராத விளையாட்டு விட்டலன் பாகம் 1 - இறுதி அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதி:

ஜருகண்டி மறக்காமல் ஒன்றைச் சுட்டிக்காட்டினான். ‘அப்பேர்பட்ட நாமதேவர் தலையைத் தடியால் தட்டியா அவரது பக்குவத்தை, குயவராக விளங்கிய கோராகும்பர் சோதித்ததாகச் ¦º¡ன்னீர்கள்?’

‘ஆமாம், நாமதேவர் மட்டுமல்ல ஞானேஸ்வர், முக்தாபா ஆகியோரையும் கோராகும்பர் சோதித்தார். அந்தச் சுவையான பகுதியை ஞானேஸ்வரர் சமாதியடைந்த இடமான ஆலந்தியில் ¦º¡ல்கிறேன். அடுத்தது அங்குதானே போகப் போகிறோம்.’

‘முக்தாபா என்று யாரையோ சொன்னீர்களே’

‘பாண்டுரங்க மகாத்மியத்தில் முக்தாபாக்கும் இடம் உண்டு. அதுமட்டுமல்ல சமர்த்த துக்காராம், ஏகநாதர், கூர்ம தாசர், சௌதா மாலி இப்படிப் பலரும் வாழ்ந்த, மறைந்த பகுதிகளுக்கெல்லாம் போö புண்ணியம் தேடிக்கொள்ளப் போகிறோம். தவிர பாண்டுரங்க பொக்கிஷத்தில் வேறு சில அமுதங்களையும் பருகப்போகிறோம்.’

கேட்கும்போதே சிலிர்ப்பாக இருந்தது. ‘மீதமுள்ள பக்திப் பயணம் அர்த்தமுள்ளதாக அமையும்’ என்றது மனது. ‘அற்புதங்கள் அமைந்ததாகவும் அது இருக்கப் போகிறது’ என்றது உள்ளுணர்வு.

தமிழக ரசிகர்கள் நாகரிகமானவர்கள். அவரவர் ஹீரோ அவரவருக்கு உசத்தி. அதற்காக எதிர்ஹீரோவைத் துவேஷிப்பதும் இன்னொரு ஹீரோவின் போஸ்டரைக் கிழிப்பதும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் நிச்சயம் இந்தத் தமிழ் மண்ணில் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் இந்த மாதிரி கேரளாவில் இருந்தது. அப்படிச் செய்தவர்கள் நிச்சயம் ரசிகர்கள் இல்லை. கூலிக்கு மாரடிப்பவர்கள். இதை ஊக்கப்படுத்தியவர்கள் ஹீரோக்கள் அல்ல; வெறும் ஜீரோக்கள்தான். இப்போது கேரளாவிலும் நல்ல முன்னேற் றம் ஏற்பட்டு இருக்கிறது. இதுதான் நல்ல நாகரிகம்.

vamanadesangal

நாகரிகம்னு சொன்னதும் என் பாட்டி சொல்ற டயலாக் ஞாபகத்துக்கு வந்துடுது! ச்சீ... என்னடி பட்டினத்துக்காரனின் நாகரிகம்? சாப்பிட்டுத் தூங்குற வீட்டுக்குள்ளேயே, கக்கூஸ் கட்டி அதுக்குள்ளேயே போறான். ‘அட்டாச்டு பாத்ரூம்’னு வேற பீத்திக்கிறான். கண்றாவி புடிச்சவன்க" என்பார். காலைக்கடன் என்றால் அது வீட்டுக்கு வெளியேதான். அதுதான் அவருக்கு நாகரிகம்.

எங்கக் கிராமத்திலிருந்து ஒரு பெண், ஸிட்டிக்குவேலைக்குப் போன, அவ புருஷனோட அப்பப்போ ஆசையா பேசிக்க செல் ஃபோன் வாங்கிக் கொடுத்தாள். ஆனா இவ லைன் போடுறப்ப அவர் யாரோடோ பேசிக்கிட்டு இருந்திருக்கார். அப்போ செல் ஃபோனில் வழக்கமாக வரும் டயலாக், ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறொரு எண்ணில் தொடர்பில் உள்ளார். சற்று நேரம் கழித்துப் பேசவும் அல்லது லைனில் இருக்கவும்’ என்று வந்திருக்கு. இவளுக்குக் கோபம். வேறோர் எண்ணில் எப்படித் தொடர்பில் இருக்கலாம் என்று சிட்டிக்கு பஸ் ஏறி, அந்த செல்ஃபோனைத் தூக்கி வீசிட்டு புருஷனைக் கையோடு கூட்டிட்டு வந்துட்டா. அந்த வெகுளித்தனத்துக்குள், அறியாமைக்குள் எவ்வளவு உன்னதமான அவளின் காதல் இருக்கு. அதை எப்படிக் கிண்டலடிக்க முடியும்?

உங்களுக்குத் தெரியுமா? ஒரு கிண்டல்தான் ஒரு கலை உருவாகக் காரணமாகவும் இருந்திருக்கு. குஞ்சன் நம்பியார்னு (கு.ந) ஒருத்தர் (கதகளியில் பிழாவு கருவி வாசிப்பவர்) கதகளியின்போது மேடையில் தூங்கி விடுகிறார் கு.ந. கதகளி ஆடுகிறவர் கு.ந-வைப் பலர் முன்னிலையில் கிண்டலடித்துவிட்டார். கேலிக்குள்ளான கு.ந., ‘ஏன் தூக்கம் வந்தது? இந்தக் கலையில் மக்கள் பிரச்னை மக்கள் பாஷையில் மக்களுக்குப் போய் சேரலை. சேர்ந்து இருந்தால் தூக்கம் வந்து இருக்காது. ஆகையால் இதுல கொஞ்சம் மாற்றம் பண்ணனும்’னு மனசுக்குள்ள நெனைச்சு அவர் ஆரம்பிச்சதுதான்‘ஓட்டந்துள்ளல்’ என்ற புதிய கலை வடிவம்; ஓர் ஊருக்குப் போய் அந்த ஊர்ப்பிரச்னையைத் தெரிந்து கொண்டு அதனைக் கவிதையில் கேலியும் கிண்டலுமாகப் பாடிச் சொல்கிற கலை வடிவம். பல பாடல்களை அங்கேயே உருவாக்கிப் பாடுறதுதான் ‘ஓட்டந்துள்ளல்’. இது கதகளியின் இன்னொரு தொடர். தேவர் மகனுக்குப் பிறகு இது போன்ற இன்னுமொரு கலையான ‘சாக்கியார் கூத்தை’ மையமாக வைத்து இயக்குநர் பரதன் ஸாரோடு ஒரு படம் பண்ண முயற்சித்தபோது அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கிய போது அவர் காலமானார். பரதன் ஸார் இன்னும் என் கண் முன்னே என்னைத் தொடர்ந்து இருக்கிறார்.

இந்தத் தொடர் வண்டி வாழ்க்கையில் ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் ஒவ்வொருவராக விலகியபடியே இருக்க...

நான் ஒரு புதிய §ƒ¡டியை நெருக்கத்தில் பார்த்தபடியே வந்தேன் அந்த ரயிலில்...

அது ஒரு விசேஷ அனுபவம்...

‘அனுமதி வாங்கித்தான் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவேன்’ என்று இளைஞர்களுக்கு காதல் பாடமே நடத்தி விட்டாரே முதல்வரின் பேரன் அருள்நிதி!
- அய்யாறு எஸ். வாசுதேவன், சென்னை

விட்டல்தாஸ் மஹராஜ் ஜெயகிஷ்ண தீக்ஷிதரின் பத்து நாள் நிகழ்ச்சியை இணையத்தில் காண ஒரு லட்சம்பேர் ஐந்நூறு ரூபாய் கட்டணம் அளித்த செய்தி ஆச்சர்யம்.
- அ.சு.கிருஷ்ணன்,  புதுச்சேரி

‘க்ளிக் கார்னர்’- காமென்ட், வித்தியாசமான கற்பனை. உமது கரும்பாய் இனிக்கும் குறும்பு நச்சுன்னு இருக்கு.
- நித்யா பாலாஜி, ஜமீன் பல்லாவரம்

ச.ந.கண்ணனின் ‘எங்கு தொட்டாலும் ஊழல்’ மனதினைப் பிசைகிறது.
- எஸ்.அமிர்தா, சென்னை - 26

‘வாழ்க வளமுடன்’ ஸ்பெஷல் ஓர் அற்புத பெட்டகம். ‘சுவடுகளின் ஆவணம்’ அவரது வரலாற்றை அறிய வைத்தது. மகரிஷி கருத்துகள், அருளாளர் ஆல்பம். வேதாத்திரிப் பற்றி பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் கட்டுரை எல்லாமே உள்ளத்துக்கு உவகைதந்தன. பயன்மிகு பொக்கிஷம். பாராட்டுகள்.
- உமாதேவி பலராமன், வேட்டவலம்

‘கண்டறியாதன கண்டேன்’ தொடர் மூலம் கோயில்கள், அங்கு நடைபெறும் விழா, வைபவங்கள் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. பன்னிரண்டு வாரம் ஸ்ரீநிவாசராகவன் பரவசத்தை ஏற்படுத்திவிட்டார். சபாஷ்...!
- ரேவதிப்ரியன், ஈரோடு

முத்துவேலின் கவிதை முத்தென ஒளிர்கிறது!
- ஆதி.கேசவன், கழுகாசலபுரண்

கடந்த முப்பது ஆண்டுகளாக ஜவுளித் தொழிலில் பலவகைகளில் ஈடுபட்டிருப்பவன் நான். இந்தத் தொழிலின் பிரச்னைகள் பற்றி இவ்வளவு விரிவாக எந்தப் பத்திரிகையும் எழுதியதில்லை.
- தேவி ராஜம், திருப்பூர்

‘ஆஹா... ஆல்பம்’ மீண்டும் கல்கியில் புதிய பகுதியா? வரவர எங்களை ஆச்சரியப்படுத்திக்கிட்டே இருக்கிறீர்களே?
- வே.முருகேசன் சென்னை - 88.

கலைஞர் குடும்பத்தின் சினிமா துறை ஆதிக்கம் பற்றி தினமணியில் மதியின் கேலிச்சித்திரம், கலைஞர் கருணாநிதிக்கு எரிச்சலாகிவிட்டது. பிருத்விராஜ் கபூரின் குடும்பத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் நடிக்கவில்லையா? சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் நடிக்கவில்லையா? ரஜினியின் மருமகனும் மகள்களும் சினிமாவில் ஈடுபட வில்லையா ? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலா நிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது என்று பொரிந்திருக்கிறார்.

நண்பர் மதி, கலைஞர் சொல்லும் குறுக்கே போடும் நூலான பூணூலைப் போட்டிருப்பவர் அல்ல. விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொ ல்ல முடியாத போதெல்லாம் பூணூலில் சரணடைவது கருணாநிதியின் வழக்கம். கலைஞர் குடும்பத்தில் இனியும் பிறக்கக்கூடிய அன்புநிதி, பண்புநிதி, குணாநிதி, தமிழ்நிதி, தேன்மொழி, கவிமொழி, லெனின், ஜீவா என்று யாரானாலும் சினிமாவில் ஈடுபடட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. இந்த நிதிகளுக்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது என்பதுதான் தமிழ் மக்களின் கவலை.

கல்லூரிப் படிப்பை முடித்ததுமே பல கோடி ரூபா பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வல்லமை கலைஞர் குடும்பத்தில்தான் இருக்கிறதே தவிர, பிருத்விராஜ் கபூர் குடும்பத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை. போட்டி கம்பெனிகளின் கேபிள்களை வெட்டிப் போட்டு அராஜகம் செததற்காக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செயப்படவேண்டுமென்று கபூர் குடும்ப வாரிசுகள் யாருக்கும் எதிராக எந்த அரசு அதிகாரியும் பரிந்துரை எழுதும் அவலம் நிகழவில்லை.


ஒரு படத்தின் ரிலீஸ் தேதி, எந்தெந்த தியேட்டரில் எத்தனை நாள் என்பதையெல்லாம் கட்டுப்படுத்தி முழு திரையுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தில் எந்தக் கபூரும் இருந்ததில்லை. திரையுலக சங்கத் தேர்தல்களில் ஜெயித்த அணியை மிரட்டி, தோற்றதாகக் கையெழுத்து போடச் சொல்லி தன் ஜால்ராக்களைப் பதவியில் உட்காரவைக்கும் வேலையை ஒரு கபூரும் செததில்லை.

கலைஞர் கருணாநிதி இப்போதெல்லாம் வசனம் எழுதும் ஒரு படம் கூட மக்கள் ஆதரவைப் பெற்று அமோகமாக ஓடுவதில்லை. ஆனால் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்துக்கு வசனத்துக்காக 50 லட்ச ரூபா சம்பளம் அவருக்கு மட்டும் தரப் படும் மர்மம், எந்தக் கபூருக்கும் புரியவே புரியாது. ராஜ்கபூரின் வசனகர்த்தா கே.ஏ.அப்பாஸ் முதல் இன்று வசூலைக்குவிக்கும் படங்களின் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி வரை யாருக்கும் இப்படிச் சம்பளம் கிடைத்ததில்லை.

பரம்பரை மிராசுதாரரான ஜி.கே வாசனின் அறிவிக்கப்பட்ட சொ த்து மதிப்பு மூன்று கோடி 78 லட்சம். எந்த சினிமாவுக்கும் கதை வசனம் எழுதி ஒரு நாளும் சம்பாதிக்காத கனிமொழியின் சொத்து எட்டுக் கோடி 56 லட்சம்; அழகிரியின் சொத்து மதிப்பு 19 கோடி என்று தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருப்பதன் மர்மங்கள் கபூர்களுக்குத் தெரியாது. கபூர்கள் முழு நேரம் நாடகமேடையில் நடிகர்களாக உழைத்து சினிமாவுக்கு வந்து ¦º¡ந்தக் காசில் ஜெயித்தவர்கள். அரசியலுக்காக சினிமாவையும், சினிமாவை ஆதிக்கம் செöய அரசியல் அதிகாரத்தையும் கலைஞரும் அவர் வாரிசுகளும் பயன்படுத்துவதால்தான் விமர்சனங்கள் எழுகின்றன. இனியும் எழும்.

இனி இந்தக் குறுக்கே நூல் போடும் விவகாரத்துக்கு வரலாம். கலைஞர் கருணாநிதியின் கணக்குப்படி தமிழகத்தில் பூணூல் போடும் பார்ப்பன சாதியினரின் எண்ணிக்கை மூன்று சதவிகிதம்தான். ஆனால் மொத்த வாக்காளர்களில் கலைஞர் கருணாநிதியை ஆதரித்து வோட்டுப் போடுபவர்கள் எப்போதும் சுமார் 25 சதவிகிதம்தான். மொத்தப் பூணூலார் மூன்று சதவிகிதம் பேரும் எதிர்த்ததாக வைத்தாலும், கருணாநிதியை விரும்பாத இதரர் 72 சதவிகிதம். மக்கள் இன்னமும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டுதான் வோட்டுப் போடுகிறார்கள். ஜாதி அடிப்படையில் மட்டுமே வோட்டுப் போட்டார்கள் என்றால் கருணாநிதியின் ஜாதியும் பூணூலார் ஜாதியும் ஏறத்தாழ ஒரே சதவிகிதம்தான். அவருக்கு 25 சத விகித ஓட்டு கூட வந்திருக்க முடியாது.

குறுக்கே நூல் போட்டவர்களை நம்பித்தான் கருணாநிதியின் மீடியா வியாபாரங்களே நடந்து வந்திருக்கின்றன. குங்குமம் பத்திரிகையைத் தொடங்கியபோது அவர் ஆசிரியராக அழைத்து வந்தது, பூணூல் போட்ட சாவியைத்தான். நிர்வாகத்தை கவனிக்க நியமித்தது, பூணூல் போட்ட டி.கே.தியாகராஜனைத்தான். பத்திரிகையின் முதல் இதழின் அட்டைப் படத்தில் கண்ணாடியில் முகம் பார்த்து பொட்டு இட்டுக் கொள்ளும் பெண்ணுக்குப் பக்கத்தில் சுவரில் தொங்கவிடப்பட்டது காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேநதிரர் படத்தைத்தான். மறைந்த முரசோலி மாறனின் நெருங்கிய நண்பரும் இன்றளவும் தி.மு.க அரசின் ஆதரவுடன் கிரிக்கெட் வாரியப் பதவியில் இருப்பவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், கலைஞரின் ஒரு பேரனுக்குப் பெண் கொடுத்த வீட்டார், வக்கீல்கள், ஆடிட்டர்கள் பலரும் குறுக்கே நூல் போட்ட பார்ட்டிகள்தான். பேரன்கள் கம்பெனியின் பெயரான சுமங்கலி என்ற வார்த்தைப் பிரயோகமே ‘அவாளு’க்குரியதுதான்.

மீண்டும் சொல்கிறேன். கலைஞர் நேரடியாக விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். முடியாவிட்டால், ஜாதியம் பேசுவது முனைமழுங்கித் துருப்பிடித்த ஆயுதம். அது உதவாது. இன்றைய புதிய வர்ணாஸ்ரமத்தில் ஆதிக்க ஜாதி,கண்ணுக்குத் தெரியாத அதிகாரப் பூணூலை அணிந்திருக்கும் புதிய பார்ப்பனரான கருணாநிதி வகையறாக்களே.

* * *

எதிர்ப்பு அஞ்சல் அனுப்புங்கள் !

தங்கள் சம்பளத்தைத் தாங்களே உயர்த்திக் கொள்ளும் உரிமை இந்தியாவில் தனியார் முதலாளிகளுக்கு அடுத்தபடியாக எம்.பி. களுக்கு மட்டுமே இருக்கிறது. மாதம் 16 ஆயிரம் ரூபா சம்பளத்தை துறைச்செயலாளர் சம்பளத்துக்கு நிகராக 80 ஆயிரம் ஆக்கும்படி பாராளுமன்றக் குழு பரிந்துரைத்தது. மேலே ஒரு ரூபாö சேர்க்க வேண்டுமென்கிறார் தீவன ஊழல் புகழ் லாலு பிரசாத் யாதவ். துறைச் செயலாளர்கள் சுமார் 25 வருட காலம் அரசுப் பணி செöது விட்டு அந்தச் சம்பளத்தை வந்தடைபவர்கள். எம்.பி.யைப் போல திடீர் லாட்டரிப் பரிசாக வந்தவர்கள் அல்ல. பதவியில் இருந்து கொண்டே வேறு தொழிலோ வணிகமோ செöயும் உரிமையும் எம்.பி.களைப் போல அவர்களுக்குக் கிடையாது.

மேலை நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தரும் சம்பளத்தை விட இந்தியாவில் குறைவு என்பது எம்.பி.களின் இன்னொரு வாதம். இந்தியாவில் தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு கடைநிலை ஊழியரின் சம்பளம் கூட மேலை நாட்டுக் கடைநிலை ஊழியருடையதை விடக் குறைவுதான். தினக்கூலியும் இங்கே குறைவுதான். இதையெல்லாம் சமமாக்குவதற்கு உழைத்த பின்னர் எம்.பி.கள் தங்களுக்கு உயர்வு கேட்டால் நியாயம்.

ஏற்கெனவே எம்.பி. களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும் ஊழல் நடப்பதாகத் தணிக்கை அறிக்கைகள் சொல்கின்றன. தற்போது ஒரு எம்.பி.க்கு சம்பளம் 16 ஆயிரம். தவிர வீடு, டெலிஃபோன், விமானம், ரயில் டிக்கட், மின்சாரம், தண்ணீர், உதவியாளர் செலவு என்று வருடத்துக்கு சுமார் ஒன்பது கோடி ரூபாöகள் செலவிடப்படுகின்றன. சம்பளத்தையும் அலவன்சையும் நான்கு மடங்கு கூட்டினால், இது பத்துக் கோடியைத் தாண்டி விடும்.

அவர்களே அறிவித்திருக்கும் சொத்துக் கணக்குகளின்படி இப்போதுள்ள 544 எம்.பி.களில் 315 பேர் கோடீஸ்வரர்கள். புதிதாக ராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 எம்.பி.களில் 43 பேரின் சராசரி சோத்து மதிப்பு தலா 25 கோடி ரூபா! சாதாரண இந்தியர்களின் நிலை என்ன? ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்த வார அறிக்கைப்படி இந்தியாவின் நடுத்தர வகுப்பினரில் 82 சதவிகிதம் பேர், அதாவது 22 கோடி பேரின் சராசரி மாத வருமானம் தனி நபருக்கு அதிகபட்சம் 2000 ரூபாதான். இவர்களையே நடுத்தர வகுப்பு என்று ¦º¡ன்னால் ஏழைகளின் நிலை எப்படி என்று கற்பனை செöயவே பயமாயிருக்கிறது. மாதம் 10 ஆயிரம் ரூபாக்கு அதிகமாக சம்பாதிப்போர் மொத்த மக்கள் தொகையில் 0.0009 சத விகிதம்தான். அதாவது வெறும் 10 லட்சம் பேர்!

எனவே எம்.பி.கள் சம்பளத்தை மேற் கொண்டு ஒரு ரூபாகூட உயர்த்த எந்த நியாயமும் இல்லை. சம்பள உயர்வுக்காக அனைத்துக் கட்சி எம்.பி.களும் சேர்ந்து கொண்டு சபைகளை நடக்கவிடாமல் செöத போது, நம் மக்களுக்கு ரத்தம் கொதித்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் சாலை மறியல் நடந்திருக்க வேண்டும். நாம் சுரணையற்றவர்களாகிக் கொண்டே போவதுதான் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வசதியாக இருக்கிறது.

நமக்குச் சுரணை இருக்கிறது என்று நிரூபிக்க இதோ ஒரு வாப்பு. மிக மலிவான விலையில் 50 பைசாவுக்குக் கிடைக்கும் ஆயுதம் அஞ்சலட்டை.

வேற ஒண்ணுமில்லே மனோ... கொஞ்சம் காபி இருந்தாக் கொடேன்..." என்று கேட்டான் கிருஷ்ணபாரதி.

இதுக்கெல்லாம் பொண்டாட்டி வேண்டியது இருக்கு... ஆனால், புருஷன், பொஞ்சாதி உறவுன்னா அது என்னன்னு மட்டும் தெரியாது..." என்று வெடுக்கென்று கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

அவள் என்ன கேட்டுட்டுப் போறா பாரேன்... வர வரப் புருஷன்ங்கிற மரியாதையே இவளுக்கு இல்லாமே போச்சு..." என்று மகன் பக்கம் பரிந்து பேசினாள் பாப்பம்மாள்.

சரி... விடும்மா... அவ ஏதோ சோல் லிட்டுப் போறா... உனக்கென்ன வந்தது?" என்று அம்மாவைச் சத்தம் போட்டான் கிருஷ்ணபாரதி.

நீ பொண்டாட்டிய விட்டுக் கொடுத்திர மாட்டியே... அது என்னம்மா வெடுக் வெடுக்குன்னு பேசிட்டுப் போறா... அதைக் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கியே?"


சமையலறையில் எப்போதும் டிகாக்ஷன் தயாராக இருக்கும். பாலைச் சூடு பண்ணி டிகாக்ஷனைக் கலந்தாள் மனோகரி. அவன் எப்போதும் ஸ்ட்ராங்காகத்தான் குடிப்பான். அவன் ருசிக்கு ஏற்றவாறு கலந்து எடுத்துக் கொண்டு போனாள். மனதளவில் அவள் அவனைவிட்டு விலகியிருக்கிறாளா, நெருங்கியிருக்கிறாளா என்பதை அவளாலேயே உணர முடியவில்லை. ஒருவேளை இத்தனை வருஷத்துப் பழக்கம் காரணமாக அவனுக்குப் பணிவிடைகள் செöகிறோமோ என்று தோன்றியது. காபி கேட்டதும் கொண்டு போöக் கொடுப்பது மனைவியாகவா, இல்லை யாரோ ஒரு மனோகரியாகவா அவனுடன் இயல்பாகப் பேசி எத்தனையோ நாட்களாகி விட்டன. இனி என்ன இருக்கிறது? அவனை விட்டுச் செல்வதென்று முடிவு செöது விட்டாள். பிறகு இந்தப் பணிவிடைகள் எல்லாம் எதற்கு?

அவனை நினைத்தால் பாவமாக இருந் தது. அவள் இல்லையென்றால், அவன் யாரிடம் இப்படி உரிமையாகக் காபி கேட்பான்? ஆனால், அடுத்த க்ஷணமே, அவனுடன் சுசீலா சிரித்துச் சிரித்துப் பேசியது ஞாபகத்துக்கு வந்தது. காபி தம்ளரை அவன் முன்னால் வைத்துவிட்டு நகர்ந்தாள். மனோகரி மனத்தின் ஒரு மூலையில் கணவன், அத்தை, மாமா எல்லோர் மீதும் இன்னமும் மரியாதை இருந்தது. அந்த மரியாதைதான் அவளைக் காபி கொண்டுபோக் கொடுக்கச் சொல்லியது. அவனுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டாலும் அவனுக்குச் செöய வேண்டிய பணிவிடைகளை எல்லாம் செöயச் சொன்னது. அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கும்போது, அவனுடைய துணிமணிகளைத் துவைக்கும் போது அவளுடைய மனம் மென்மையாகிவிடும். அவன் மீது ஏற்பட்ட கோபமெல்லாம் வடிந்து விட்டது போலிருக்கும். ஆனால், அடுத்த க்ஷணமே அவனை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் என்று அவளாகவே ஏற்படுத்திக் கொண்டிருந்த வைராக்கியம் சட்டென்று தலைதூக்கும்.

அவள் அவனை விட்டுச் செல்லப் போகிறாள். அதுதான் நிஜம். இன்னும் சில நாட்களில் வருணுக்கும் கார்த்திகாவுக்கும் பள்ளிக்கூடம் விடுமுறை விட்டு விடும். குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருநெல்வேலிக்கே போவிடுவாள். அவளுடைய அந்த நடவடிக்கை அப்பாவுக்குப் பிடிக்காவிட்டால், ஆபீஸில் பம்பாக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சென்று விடுவாள். பம்பாக்குத்தான் செல்ல வேண்டியதிருக்கும் போல. அப்பா அன்று ஃபோனில் பேசியதிலிருந்தே அவர் தனது முடிவை ஆதரிக்க மாட்டாரென்று தோன்றியது. விடுமுறை ஆரம்பமானதும் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்கு டி.சி. வாங்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டாள்.

பாப்பம்மாள் மருமகளை விடுவதாக இல்லை. இன்று அவளிடம் பேசி இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று முடிவு செதாள். காபி தம்ளரை வைத்து விட்டு வேகமாகச் செல்ல முயன்றவளைப் பாப்பம்மாளின் பேச்சு நிறுத்தியது.

நானும் ஒரு பத்து நாளா உன்னைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். அவன் கூட வண்டியிலே போகிறதில்லை... அவனோட சரியாப் பேசறதில்லை... அது ஏன்னு கேக்கேன்?"

அத்தை என் வாயைக் கிளறாதீங்க. நான் பாட்டு ஏதோ இருந்துட்டுப் போறேன்..." என்றாள் மனோகரி. சண்முகமும் மனைவி பேசியதைக் கேட்டு விட்டு எழுந்து வந்து அறை வாசல் படியில் நின்று கொண்டார். அவர் மனதிலும் அந்தக் கேள்வி இருக்கிறதே.

ஒன்னை யார் என்ன செஞ்சா...? நாங்க யாரும் எதுவும் சோன்னோமா?" என்று கேட்டாள் பாப்பம்மாள்.

சண்முகம் மருமகளிடமோ, மகனி டமோ அதிகம் பேச மாட்டார். அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பார். ஆனால், மனோகரியின் போக்கு அவருக்கே பிடிக்கவில்லை.

அத்தை கேக்கறதுக்குப் பதில் சொல்லேன்..." என்றார் சண்முகம். அப்பா பேசியது கிருஷ்ணபாரதிக்கே ஆச்சரியமாக இருந்தது. மனோகரி, தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகாவின் அருகே உட்கார்ந்து கொண்டு குழந்தையின் தலையை வருடினாள்.

நான் எப்படியோ இருந்துட்டுப் போறேன். உங்களுக்கென்ன?"

எப்படியோ இருந்துட்டுப் போறேன்னா எப்படி... இவ்வளவு நாளும், இத்தனை வருஷமா இப்படியா இருந்தே?" என்றாள் பாப்பம்மாள்.

எனக்கு இங்க நடக்கிற சில விஷயங்கள் பிடிக்கலை..." என்றாள் மனோகரி.

இங்கே என்ன அப்படித் தப்பா நடந்துட்டுது?"

உங்களையோ, மாமா வையோ குத்தம் சொல்லலே..."

அதான் கிருஷ்ணன் மேல என்ன குத்தம்ங்கிறேன்?"

இது எதுக்கு மனோகரி சுத்தி வளைச்சுப் பேசிக்கிட்டு இருக்கே? சுசீலா இங்க வர்றது, அவளோட நான் பேசுறது பிடிக்கலேன்னு நேரடியாவே சொல்லிரேன்..." என்றான் கிருஷ்ணபாரதி. அவனை விழுங்கிவிடுபவளைப் போல பார்த்தாள் மனோகரி.

சுசீலா வர்றது பிடிக்கலையா? எதுக்கு...?" என்று பாப்பம்மாள் துளைத்தாள்.

அவ என்ன பொம்பள மாதிரியா நடந்துக்கிறா? அடுத்த ஆம்பளையைத் தொட்டுத் தொட்டுப் பேசறதும், ஈன்னு இளிச்சு இளிச்சுப் பேசுறதும்... அவதான் வேணும்னா நான் எதுக்கு...?" என்று குரல் தழுதழுக்கச் சொன்னாள் மனோகரி.

அவதான் வேணும்னு நான் என்னைக்காவது சோன்னேனா?" என்றான் கிருஷ்ண பாரதி.

இதை வெளிப்படையாச் சொல்ல வேற சோல்லணுமாக்கும். அதான் பார்த்தாலே தெரியுதே..."

பாப்பம்மாள் சிரித்தாள். அதைப் பார்த்து மனோகரிக்கு எரிச்சலாக இருந்தது. மனோ, அவ சுபாவமே அப்படித்தான். எல்லார்கிட்டேயும் சரிக்குச் சமமா பேசுவா. கலகலன்னு சிரிப்பா... இதைப் போயிக் குத்தமா எடுத்துக்கிட்டியே?" என்றாள் பாப்பம்மாள்.

ஒங்களுக்கு வேணும்னா அவ ஒசத்தியா இருக்கலாம். சம்சாரம் நடத்துற வீட் டுக்குள்ளே வந்து என் புருஷனைத் தொட்டுத் தொட்டுப் பேசுறது எனக்குப் பிடிக் கலை. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. பிள்ளைகளைக் கூட் டிட்டு திருநெல்வேலிக்குப் போகப் போறேன்... இல்லேன்னா பம்பாயிலே எங்க ஆபீஸ் இருக்கு. அங்கே போயிருவேன்... என்னை யாரும் தடுக்க முடியாது..." என்று சொல்லிக்கொண்டே அழுதாள் மனோகரி.

இது என்னடா கூத்தா இருக்கு... யாரோ ஒருத்திக்காக நீ எதுக்கு வீட்டை விட்டுப் போகப் போறேன்கிறே? மூட்டைப்பூச்சிக்குப் பயந்து யாராவது வீட்டைக் கொளுத்துவாங்களா? அவள இனிமே இங்கே வராதேன்னு சொல்லிட் டாப் போச்சு. இதுக்குப் போயி புருஷனை விட்டுப் போறேங்கிறீயே...?".

எம்.கே.இராதாகிருஷ்ணன்,
குரோம்பேட்டை

நான் மாநில அரசுத் துறையில் வேலை செöது ஓöவுபெற்றவன். பென்ஷனர். மாத ஓவூதியம் ரூ. 9430 வருகிறது. என் வங்கியில் பான் கார்டு நம்பர் கேட்கிறார்கள். நான் பான்கார்டு வைத்துக்கொள்ள வேண்டுமா?
உங்களுடைய பென்ஷன் தொகையை மட்டுமே வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு பான் கார்டு தேவையில்லை. நீங்கள் வங்கியில் வேறு டெப்பாசிட்டுகள் வைத்திருந்து அதற்கு வங்கி தரும் வட்டித் தொகை, வருமான வரி கட்டும் அளவுக்கு இருந்தால் நீங்கள் கட்டாயம் பான் கார்டு வைத்துக்கொள்ளவேண்டும். எப்படியும் பான் கார்டு வாங்கி வைத்துக்கொள்வதே சிறந்தது.

எம். மாலதி,
தென்திருப்பேரை

பல தனியார் பெரும் தொழில் நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட் வாங்குகிறார்கள். வங்கி வட்டியை விட தனியார் நிறுவனங்களின் வட்டி அதிகமாகவும் இருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செவது நம்பிக்கையானதா?
தனியார் தொழில் நிறுவனங்கள் வாங்கும் பிக்செட் டெப் பாசிட்டில் முதலீடு செöவது ஓரளவுக்கு ரிஸ்க் உள்ள விஷயமாகும். அந்த அளவு ரிஸ்க்கிற்குத்தான் வட்டியும் ஓரளவுக்கு அதிகமாகத் தரப்படுகின்றது. எந்த நிறுவனத்தின் டெப்பாசிட் ஸ்கீமில் பணம் போட விரும்புகின்றீர்களோ அந்த நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் பண ரீதியான பண்பாட்டின் வரலாறு (ability and willingness to repay) குறித்து, கொஞ்சம் தெளிவாகத் தெரிந்து கொண்டு பின்னர் முடிவெடுக்கவும்.

இரா. வேல்முருகன், தேனி
தேசிய வங்கி ஒன்றில் என் மனைவி பேரிலும் என் பெயரிலும் பிக்சட் டெப்பாசிட் செöதுள்ளேன். அதில் இருந்து வரும் வட்டிக்கு வரி உண்டு என்கிறார்கள் சிலர். இல்லை என்று இன்னும் கொஞ்சம் பேர் சோல்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு மேல் போட்டு வைத்தால் வரி இல்லை என்றும் ¦º¡ல்கிறார்கள். நான் ஒவ்வொரு ஆண்டும் டெப்பாசிட்டை ரெனியூ செöது வருகிறேன். என் கேள்விகள் இதுதான்: 1. வட்டிக்கு வரி உண்டா? அதை நான் என் ஆண்டு வருவாயில் காண்பித்து வரி கட்ட வேண்டுமா? 2. ஒவ்வொரு ஆண்டும் டெப்பாசிட்டை ரெனியூ செöவது சரியானது தானே?
ஒரு நபருக்கு வருமானமாக வரும் வட்டியை (வங்கியிலிருந்தோ வேறு வழியாகவோ) அவருடைய வருமான ஆண்டு வரிக்கணக்குச் செலுத்தவேண்டிய வருமானத்துடன் சேர்த்து அதற்குண்டான வருமான வரியைச் செலுத்தவேண்டும். குறைந்த கால டெப்பாசிட்டை விட நீண்டகால டெப்பாசிட்டுகளுக்குத்தான் வட்டி அதிகம். சில அசாதாரணமான சூழ்நிலைகளில் வட்டி விகிதம் ஏறும்போது நீங்கள் நீண்ட நாள் டெப்பாசிட் போட்டிருந்தால், உங்களுக்குக் கிடைக்கும் வட்டி மாறிய வட்டியை விட குறைவாகிவிடும். இந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க நினைத்தால் மத்திம காலமாக 2 -3 ஆண்டுகளுக்கான டெப்பாசிட்டில் பணத்தைப் போடலாம்.

எஸ்.சம்பத்ராஜன், ஆரணி
பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் எழுதிய வகையில் எனக்கு ஒவ்வொரு ஆண்டும் ராயல்டி வருகிறது. இருபதாயிரம் ரூபாக்கு மேல் போனால், பதிப் பகத்தில், டி.டி.எஸ் (TDS) பிடித்துவிடுகிறார்கள். எதற்கு இந்த டி.டி.எஸ்?
டி.டி.எஸ் (t.d.s ) என்றால் வருமான வரி பிடித்தம் என்று பொருள். வருமானத்தை உங்களுக்குத் தருபவர் அதில் இந்தப் பிடித்தத்தை செöது, அதை வருமான வரித்துறைக்குச் செலுத்திவிடுவார். இது வருமான வரி சட்டத்தின்படி கட்டாயம் செயப்பட வேண்டிய ஒன்று. இவ்வாறு பிடித்தம் செöது செலுத்தப்பட்ட தொகையை வருமான வரித்துறை உங்கள் கணக்கில் (பான் கார்டு எண்ணில்) வரவு வைத்துக்கொள்ளும். வருமான வரித்துறை உங்கள் டி.டி.எஸ். தொகையை, நீங்கள் வரியைச் செலுத்தியது போலவே கணக்கில் எடுத்துக்கொள்ளும். நிதியாண்டின் இறுதியில் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியிருந்தால் டி.டி.எஸ். தொகையைக் கழித்துவிட்டு மீதியைச் செலுத்துங்கள். நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்றால் (உங்கள் ஆண்டு வருமானம், வரி விலக்கு அளிக்கப்பட்ட தொகைக்குள் இருந்தால்), இந்தத் தொகையை ஆண்டு இறுதியில் வருமான வரித்துறையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான வழிவகைக்கு உங்கள் வருமான வரி ஆலோசகரை அணுகுங்கள்.

காங்கிரஸ் மேடைகளைத் தமது அதிரடிக் கருத்துக்கள் மூலம் கலக்கி வருகிறார் கார்த்தி சிதம்பரம். சர்ச்சையான விஷயங்களைத் துணிச்சலாகப் பேசும் கார்த்தியைச் சந்தித்தோம்.

உங்களின் மேடைப் பேச்சு கூட்டணி கட்சியான தி.மு.க.வைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் என்று காங்கிரஸ்காரர்கள் சிலர் சொல்கிறார்களே?

கூட்டணிக் கட்சிகளைச் சங்கடமாக்கும் அளவுக்கு நான் எந்தக் கருத்துகளையும் பேசுவதில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து ஆட்சியைப் பிடிக்க எப்படிப்பட்ட செயல் திட்டம் தீட்ட வேண்டும். காங்கிரஸ்காரன் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து நடமாட கட்சி எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதுபோன்ற கருத்துகள்தான் என் பேச்சின் மையக் கருத்து. விமர்சனம் இல்லாமல் முன் னேற முடியாது. மக்கள் பிரச்னைகளையும், காங்கிரஸ் சாதனைகளையும் குறித்து மேடைகளில் பேசத் தயங்கக் கூடாது. காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பொதுக்கூட்டங்களில் பேசுவதில்லை. காது குத்து, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டாலே கட்சி வளர்ந்து விடும் என்று செயல்படுகிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் நேரடி சாதனைகள், மாநில அரசு மூலமாக நிதி கொடுக்கப்பட்டு நிகழ்த்தப்படும் சாதனைகள் ஆகியவற்றைப் பேசினால்தானே கட்சி வளரும்? இதைப் பேசினால் கூட்டணிக் கட்சிக்குப் பிடிக்காது என்றால் நான் என்ன செய்ய முடியும்?"

காங்கிரஸுக்கு 78 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்று சொல்கிறீர்களே...?


தமிழ்நாட்டில் முப்பத்தொன்பது பாராளுமன்றத் தொகுதிகள். ஒரு எம்.பி. தொகுதிக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்கிறேன். அப்போதுதான் தமிழகம் முழுமைக் கும் பரந்துபட்ட அளவில் காங்கிரஸுக்குப் பிரதிநிதிகள் இருப்பார்கள். இப்போது பதினைந்து பாராளுமன்றத் தொகுதிகளில் எங்கள் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. இது என் கருத்து. முடிவெடுக்க வேண்டியது எங்கள் மேலிடம். அவர்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியது என் கடமை."

இளைஞர் காங்கிரஸ் விவகாரத்தில் நீங்கள் தலையிடக் கூடாது என்று அதன் தலைவர் யுவராஜ் சொல்கிறாரே?

இளைஞர் காங்கிரஸ் செயல்பாடுகளிலோ அல்லது நிர்வாகத்திலோ எந்தவிதத்திலும் நான் தலையிடுவதில்லை. அதுகுறித்து கருத்தும் சொல்வதில்லை. ஆனால் என் நண்பர்கள் இளைஞர் காங்கிரஸில் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் நடத்தும் கூட்டங்களில் என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கிறார்கள். நான் மட்டுமல்லாமல் எம்.எல்.ஏக்கள், உள்ளூர் பிரமுகர்கள் என்று நிறைய பேர் வருகிறார்கள். அப்படிப் பேசக் கிடைக்கும் வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொண்டு கட்சி செயல்திட்டம், வளர்ச்சி குறித்துப் பேசுகிறேன். இது தவறா?"

ஜாதிரீதியான சென்ஸஸ் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இது என் தனிப்பட்ட கருத்து. கட்சிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜாதியை என்றுமே நான் ஏற்றுக் கொண்டதில்லை. ஜாதியை, ஜாதி அமைப்பை நிராகரிக்கிறேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் உருவாக ஜாதிகள் தடையாக இருப்பதாக நினைக்கிறேன். இதைச் சொல்வதற்கான முழுத் தகுதி எனக்கிருக்கிறது. என் மகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் இந்தியன் என்று குறிப்பிட்டு, ஜாதிகள் குறித்த கேள்விக்கு எதிரில் ‘பொருந்தாது’ என்று எழுதிக் கொடுத்திருக்கிறேன். அவரவர் ஜாதி எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கொடுக்கவே ஜாதி ரீதியிலான சென்ஸெஸ் என்கிறார்கள். இடஒதுக்கீட்டில் ஜாதி அடிப் படையிலான அணுகுமுறையே தவறு. ஆனால் இடஒதுக்கீடு தேவை. அது பொருளாதார - சமூகச்சூழலை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பலனடைந்தவர்களே மீண்டும், மீண்டும் பயனடைகிறார்கள். எனவே பள்ளியில் படிக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம். அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பொருளாதாரத்தில் பிற்பட்ட நிலையில் இருப்பது மட்டுமல்லாமல் சமூகச் சூழலிலும் பின்தங்கி இருக்கிறார்கள். எனவே, அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்று சொன்னால் இன்றைய சூழலில் பொருத்தமாக இருக்கும்."

பள்ளிகள் குறித்துப் பேசியதால் கேட்கிறோம். இந்த வருடம் தமிழகப் பள்ளிகளில் அரசு கல்விக் கட்டணம் நிர்ணயித்த விவகாரத்தில் பெரிய குழப்பம் நிலவுகிறதே?

நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கமிட்டி ஆழமாக ஆராயாமல் செயல்பட்டிருக்கிறது. கல்வி வியாபாரமாகக் கூடாது. இரண்டு கருத்துக்கு இடமில்லை. அதேசமயம், ஒரு பள்ளியின் கட்டு மானம், வசதிகள், தரத்தைக் கட்டிக் காக்க செலவழிக்கும் நிலை ஆகிய வற்றையும் கணக்கில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ப்ளஸ் டூ படிப்பவர்களுக்கு 11,000 ரூபாய் வருடத்துக்கு என்று நிர்ணயித்திருக்கிறார்கள். அப்படியென்றால் எல்.கே.ஜிக்கு மிகவும் குறையும். இன்றைய நிலையில் அறக்கட்டளை நடத்தும் பள்ளிகள் உட்பட ஆயிரக்கணக்கான பள்ளிகள் இந்தக் கட்டணத்தை வைத்துக்கொண்டு நடத்த முடியாது. இதில் அரசு பிடிவாதமாக இருந்தால் ஒன்றரை லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையிழக்க வேண்டிவரும். பள்ளிகளின் மேல் மனுவை ஏற்றுக்கொண்டு, இந்த வருடம் பிரச்னையை நன்கு அலசி, அடுத்த வருடம் முதற்கொண்டு கட்டணம் நிர்ணயித்திருக்கலாம். தரமான பள்ளிகளை அரசே நடதினால் பிரச்னையில்லை."

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர்  வாங்குங்கள்.

 
Kovil vimanangalai pattriya th..... - S.KANNAN, NEYVELI, 7/12/2010
Makkalukkaga sevai seiya vanth..... - S.KANNAN, NEYVELI, 7/12/2010
abishekkai vida vikram naddipu..... - S.KANNAN, NEYVELI, 7/7/2010
Kanavuth thozhirchalaiyil yeru..... - S.KANNAN, NEYVELI, 7/7/2010
Oorvasiyin 'kalai ezhunthavuda..... - S.KANNAN, NEYVELI-7., 7/7/2010

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2003-2009, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 (30 lines)
Fax: 91-44-4343 8899
To advertise, contact marketing@kalkiweekly.com